Breaking News

Chennai to Thirukarugavur Garbarakshambigai Temple Visit Experience

 சென்னை to திருக்கருகாவூர்  பயணம் : (06-05-2022 - 07-05-2022)


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலின் சிறப்பு :

சுகப்பிரசவம் நடக்க, பிரசவ வலி இல்லாமல் இருக்க திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வழிபட்டால் , நல்ல படியாக எல்லாம் நடக்கும் என்பது ஐதீகம் .

கோயில் அமைவிடம் :


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் எனும் கிராமத்திற்கு அருகில் அமைத்துள்ளது .

சென்னை to திருக்கருகாவூர் பயண அனுபவம் :

வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டு  மறுநாள் காலை 6.30 மணிக்கு பாபநாசம் பேருந்து நிலையம் அருகில் இறங்கினோம் , அங்கே  இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்கு ஆட்டோ மூலம் சென்றோம் , 


 

(நகரப் பேருந்து உண்டு, ஆனால் அடிக்கடி கிடையாது , மேலும் பேருந்தில் சென்றாலும் ,  வெளிப்பகுதியில் இருந்து கோவில் செல்ல 1 கிலோ மீட்டர் வரும், கோவில் வரை பேருந்து வசதி இல்லை ) .


மேலே குறிப்பிட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர் எங்களை அந்த கோவிலுக்கு அழைத்து சென்றார் , போகும் வழியில் கோவிலின் சிறப்பம்சங்களையும் சொல்லிக் கொண்டே வந்து , திருக்கருகாவூர் கோவிலின் அருகே உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசா தங்கும் விடுதியில்  இறக்கி விட்டார் . (ஆட்டோ கட்டணம் 100 ரூபாய் ).

 


பின்பு  ஸ்ரீ ஸ்ரீனிவாசா தங்கும் விடுதியில் குளித்து விட்டு வெளியில் வந்தோம் (கட்டணம் ஒரு  நபருக்கு 50 ரூபாய் )


 

அதன்பின் அங்குள்ள அக்கா , கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் எல்லாம் சொல்லி , அங்கேயே  பூஜைக்கான அனைத்தையும் கொடுத்து கோவிலுக்கு சென்று வாருங்கள் என்றார் . 


 

கோவிலின் உள்ளே சென்றதும் உள்ள அலுவலகத்தில் அர்ச்சனை சீட்டு , நெய் , ஆகியவற்றை வாங்கிவிட்டு முதலில் சிவ பெருமானை தரிசித்தோம் , பின்பு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ஆலயம் சென்றோம் காலை 8.30 முதல் 9 மணி க்குள் , அம்மன் அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது .


 

அதன் பின் இத்திருத்தலம் வந்து குழந்தை பெற்றவர்கள் துலாபார மற்றும் தொட்டிலில் குழந்தையை வைத்து கோவிலை சுற்றி வருதல் , அர்ச்சனை முதலியவற்றை செய்தார்கள் .

குழந்தை வரம் வேண்டி வந்தவர்கள் , அர்ச்சனை செய்து , நெய்யால் அம்மன் படியை மெழுகி , குழந்தை வேண்டி மனமுருகி வேண்டிக்கொண்டனர் . கோவிலில் அம்மன் அருள் பெற்று கொடுக்கும் நெய்யை நாட்கள் தம்பதி இருவரும் உட்கொண்டு வர வேண்டும் என்று அர்ச்சகர் கூறினார் . இனிதே நிறைவடைந்தது அம்மன் தரிசனம் .

முக்கிய தகவல் :

தேங்காய் , பழம் , மாலை இவற்றை மட்டும்  வெளியில் இருந்து வாங்கி கொண்டு செல்வது நல்லது , மற்றவை  எல்லாம் கோவில் உள்ளே உள்ள அலுவலகத்தில் கிடைக்கிறது (விலையும் குறைவு ). 

நாங்கள் சென்ற ஸ்ரீ ஸ்ரீனிவாசா தங்கும் விடுதியில் பூஜை பொருட்கள் 300 ரூபாய்  மற்றும் அம்மனுக்கு செலுத்தும் புடவை 600 ரூபாய், நெய் பாட்டில் 500 கிராம்   380 ரூபாய் என  பில் போட்டார்கள்  . ( கோவிலின் உள்ளே சென்றதும் தான் தெரிந்தது  அங்குள்ள அலுவலகத்திலே அம்மனுக்கு கொடுக்கும் புடவையும், நெய்யும், அம்மன் திருவுருவப் படமும் (போட்டோ) குறைந்த விலையில்  இந்து அற நிலையத்துறையால் வழங்கப்படுகிறது என்று .

கோவில் நடை திறப்பு காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை : மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை

கோவிலின் அருகிலே தாங்கும் விடுதிகள் , குளியல் அறைகள் நிறைய உள்ளன

No comments