Breaking News

Madurai Railway Division 2s Reservation System Cancel Trains Details

 


மதுரை கோட்டத்தில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில்  இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றம் :


கொரோனா தொற்றுக்கு பிறகு கூட்டம் கூடுவதை தவிர்க்க ரயில்களில் ரயில் பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட்டன. தற்போது சாதாரண இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக ரயில்களில் இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு இல்லாத பெட்டிகளாக பின்வரும் தேதிகளில்  மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1.  2022 மார்ச் 16 முதல் 

ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் (16617),
மதுரை - புனலூர் (16729), புனலூர் - மதுரை (16730),
திருநெல்வேலி -  பாலக்காடு பாலருவி ரயில் (16791),
மதுரை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் (20602),
தஞ்சாவூர் மெயின் லைன் வழி மதுரை - சென்னை எழும்பூர் (22624)


2. 2022 மார்ச் 20  முதல்

தூத்துக்குடி - மைசூர் (16235),
ராமேஸ்வரம் - செகந்திராபாத் (07686),
மதுரை - கசக்குடா (17616)


3. 2022 ஏப்ரல் 1 முதல்

 தூத்துக்குடி - சென்னை முத்துநகர் (12694) ரயில்


4. 2022 ஏப்ரல் 16 முதல்

திருநெல்வேலி - சென்னை நெல்லை ரயில் (12632),
மதுரை - சென்னை பாண்டியன் ரயில் (12638),
செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12662),
ராமேஸ்வரம் - சென்னை போட் மெயில் (16852),
ராமேஸ்வரம் - சென்னை சேது ரயில் (22662)


5. 2022 ஏப்ரல் 20 முதல்  

ராமேஸ்வரம் - திருப்பதி ரயிலில் (16780)  

6. 2022 மே 1 முதல் 


திருச்செந்தூர் - சென்னை செந்தூர் ரயில் (16106),
செங்கோட்டை -  சென்னை  சிலம்பு ரயில் (16182),
மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரயில் (16344),
காரைக்குடி -  சென்னை பல்லவன் ரயில் (12606),
மதுரை -  சென்னை வைகை ரயில் (12636),
புனலூர் - குருவாயூர் ரயில் (16327),
ராமேஸ்வரம் - திருச்சி ரயில் (16850) 

ஆகிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகிறது.


இந்த தேதிக்கு பிறகு இருக்கை வசதி முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில் கட்டண தொகை முழுமையாக திருப்பி தரப்படும்.


இது சம்பந்தமாக அவர்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.

No comments